குழந்தைகள் தினமான இன்று முதல்வர்எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சர்களுடன் அம்மா உணவகத்திற்கு சென்று இட்லி சாப்பிட்டு கொண்டாடினார்.
இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
பின்னர் அங்கிருந்த அம்மா உணவகத்துக்கு அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் அமைச்சர்களுடன் சேர்ந்து அம்மா உணவக இட்லியை முதல்வர் எடப்பாடி சாப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மேலும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்துக் கொடுக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.