மதுரைக்கு மல்லி மட்டுமல்ல கரண்டி ஆம்லெட்டும் ஃபேமஸ் தான். சரி ஆம்லெட் தெரியும், இது என்ன, கரண்டி ஆம்லெட்னுதான யோசிக்கிறீங்க.
யோசிக்க வேண்டாம், எப்படி செய்றதுனு பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
முட்டை - 1,
சின்ன வெங்காயம் - கைப்பிடி,
கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் - சிறிதளவு.
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தினுள் உடைத்து ஊற்றி, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ளவும்.
பின்னர் பெரிய குழி கரண்டி ஒன்றை எடுத்து, அடுப்பின் மீது வைக்கவும். இப்பொழுது லேசாக அதில் எண்ணெய் தடவுங்கள்.
பின்பு சிறிதளவு முட்டை கலவையை ஊற்றுங்கள்.
சிறிது நேரம் கழித்துத் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுங்கள். விருப்பப்பட்டோர் குழிப்பணியாரச் சட்டியிலும் இதைச் செய்யலாம்.
இப்பொழுது மிருதுவான சுவையான கரண்டி ஆம்லெட் தயார்.