கஜா புயல் சேதம்: விவசாயிகளுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் நிவாரணம் அறிவிப்பு

Advertisement

கஜா புயலால் உயிரிழந்த கால்நடைகளுக்கும், பயிர்சேத கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கும், 1.17 லட்சம் வீடுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் 15.11.2018 அன்று இரவு நாகப்பட்டினம் அருகில் ‘கஜா’ புயல்கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. எனினும் புயலின் தாக்கத்தினால் பொருட்சேதங்கள் பெரிய அளவில் ஏற்பட்டன.

புயல் நாகப்பட்டினத்தில் 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கனமழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘கஜா’ புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த 2,49,083 நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 493 முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

‘கஜா’ புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட் சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இப்புயலின்போது 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ‘கஜா’ புயல் காரணமாக 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 30,404 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 30,328 ஓட்டு வீடுகள் சேத மடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.

‘கஜா’ புயல் காரணமாக வாழை, தென்னை, நெல் மற்றும் இதர பயிர்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி, விவசாய பெருமக்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்தி உள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.

இந்த சேத விவரங்களை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சுனில் பாலிவால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், அமுதா திருவாரூர் மாவட்டத்திற்கும், ராதா கிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

‘கஜா’ புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப் புரம், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப் பட்டு வருகிறது.

‘கஜா’ புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 347 மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) சேதமடைந்துள்ளன. சுமார் 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. 3,559 கி.மீ நீளமுள்ள மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சேவை பாதிக்கப்பட்டது.

மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின் மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள 12,532 மின்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அம்மா வழியில் செயல்படும் இந்த அரசு கஜா புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட் டுள்ளன. மேலும், 1014 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 84,436 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

‘கஜா’ புயல் காரணமாக சேதமடைந்த படகுகளை மீன்வளத்துறை மூலம் உடனடியாக கணக்கீடு செய்து அறிக்கை அனுப்புமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை பெறப்பட்டதும், அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். இந்த அரசு, சேத மடைந்த பகுதிகளை சீர் செய்யும் பணி களை போர்க் கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>