கஜா புயல் எதிரொலியால் கடுமையான சேதங்களை சந்தித்த நாகை மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
கஜா புயல் கோரதாண்டவத்தினால் பல மாவட்டங்கள் பயங்கர சேதத்தை சந்தித்தது. குறிப்பாக, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன.
கிராமங்களில், பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. பயிரிட்ட பயிர்கள் வாழை, தென்னை பயிர்கள் எல்லம் புயல் காற்றால் முறிந்து சேதமாகிவிட்டது. இதனால், விவசாயிகளுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் குறித்து அறிவித்துள்ள நிலையில், சேதங்களை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. இந்த புயலால், 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 735 கால் நடைகளும் உயிரிழந்திருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயல் பாதித்த பகுதிகளை வரும் செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட உள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில், கடும் சேதத்தை சந்தித்த நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, அம்மாவட்ட ஆட்சியருடன் துணை முதல்வர் ஆலோசனை நடத்தி சேதங்கள் குறித்து தெரிந்துக் கொண்டார்.