தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு- ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினர் விடுதலை

TN Govt releases Dharmapuri bus case convicts

by Mathivanan, Nov 19, 2018, 15:18 PM IST

தமிழகத்தை உலுக்கிய தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2000-ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை இலக்கியம் பட்டியைச் சேர்ந்த விவசாயக் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்துக்கு தருமபுரி அருகே அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் பலியாகினர். 16 மாணவிகள் காயம் அடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் நெடுஞ் செழியன், ரவீந்திரன்,முனியப்பன் ஆகிய 3 அதிமுகவினருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தற்போது எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த 3 அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டுளனர்.  

You'r reading தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு- ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினர் விடுதலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை