கஜா புயல்... காவிரி டெல்டாவில் தினகரனின் வன்முறை விளையாட்டு- அதிர்ச்சியில் அமைச்சர்கள் Exclusive

TN Govt Shocks over Dinakarans Violence

Nov 22, 2018, 09:43 AM IST

காவிரி டெல்டாவில் அமைச்சர்களை விரட்டியடிக்கும் வன்முறையின் பின்னணியில் தினகரன்தான் இருப்பதாக அரசுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியிருப்பது ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் சேதங்களை பார்வையிட சென்ற அமைச்சர்கள் பலரும் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் ரொம்பவே அச்சத்துடன் பலத்த பாதுகாப்புடன் வலம் வருகின்றனர்.

கஜா புயல் நிவாரணப் பணிகளில் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்த மக்களா பல இடங்களில் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்கிற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுப்பப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் குறித்து அரசுக்கு உளவுத்துறை அதிர்ச்சி தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், எடப்பாடி அரசு இத்தனை நாளில்.. இத்தனை மாதத்தில் கவிழும், கவிழ்ப்பேன் என கூறிவந்தார் தினகரன். ஆனால் அவரால் அதை சாதிக்க முடியவில்லை.

இந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வாய்ப்பாக கஜா புயலை பயன்படுத்தி வருகிறார் அவர். அதாவது காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த இடத்துக்கு அமைச்சர்கள் வந்தாலும் அவர்களை எதிர்த்து உச்சகட்ட போராட்டங்கள் நடத்துங்கள் என்பதுதான் அமமுகவினருக்கு தினகரன் கொடுத்த அசைமெண்ட்டாம்.

ஒரு அமைச்சருக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் 100 பேர் பங்கேற்றால் அதில் 80 பேர் அமமுகவினராகத்தான் இருக்கின்றனர். தினகரனின் திட்டமிட்ட இந்த வன்முறைதான் மக்கள் போராட்டமாக சித்தரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இந்த அறிக்கை கோட்டை வட்டாரங்களை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

-எழில் பிரதீபன்

You'r reading கஜா புயல்... காவிரி டெல்டாவில் தினகரனின் வன்முறை விளையாட்டு- அதிர்ச்சியில் அமைச்சர்கள் Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை