வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகளின் திருமணம் உறவினர்கள் 5 பேர் மட்டுமே பங்கேற்க எளிமையாக நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காடுவெட்டி குரு மறைந்த உடனே அவரது குடும்பத்தினரிடையே புகைச்சல் வெளியாகி இருந்தது. காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், தமது தாயை உறவினர்கள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார்.
ஆனால் பாமகவினரோ கனலரசன் தான் உறவினர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு படிப்பை கைவிட்டு தாயை அடித்து உதைத்தார் என கூறி வந்தனர். இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகளின் திருமணம் இன்று எளிமையாக நடைபெற்றது.
காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகைக்கும், காடுவெட்டி குருவின் மூன்றாவது
தங்கை சந்திரகலாவின் மகன் மனோஜூக்கும்தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
காடுவெட்டி குருவின் மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால் காடுவெட்டி குரு மகளுக்கும் அவரது அத்தை மகனுக்கும் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
ஏற்கனவே குருவின் மகள் திருமணம் குறித்தும் சர்ச்சை கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது