நடிகர் ராதாரவிக்கு மலேசியாவில் டத்தோ பட்டம் கொடுத்தது யார் என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாடகி சின்மயி.
மீ டு புயலில் சின்மயி அடுக்கடுக்காக புகார் கூறி வந்தார். கவிஞர் வைரமுத்து மீதும் தடாலடி புகார் தெரிவித்தார் சின்மயி.
இதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சின்மயி சிக்கினார். இந்த நிலையில் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராதாரவி, சின்மயியை கடுமையாக விமர்சித்தார். தற்போது ராதாரவிக்கு மலேசியாவில் டத்தோ பட்டம் 2012-ல் வழங்கப்பட்டது குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் சின்மயி.
ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, மலேசியாவின் மலேகா நகர நிர்வாகம் தமக்கு அனுப்பிய கடிதத்தில் ராதாரவி என்ற பெயரில் யாருக்கும் டத்தோ பட்டம் வழங்கவில்லை எனக் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.