போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் நாளை முதல் போராட்டம் அறிவிப்பு

by Isaivaani, Jan 10, 2018, 09:08 AM IST

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் போராட்டம் இன்றுடன் 7வது நாளாக நீடிக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் நாளை முதல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்றுடன் ஏழாவது நாளாக தொடர்கிறது. இதனால், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. பொது மக்களும் தினந்தோறும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையை சமாளிக்க, தமிழக அரசு தற்காலிக ஊழியர்களை தினக்கூலிக்கு நியமித்து பேருந்துகளை ஓட்டி வருகின்றனர். இதன் விளைவாக, பல்வேறு இடங்களில் விபத்துகள் நடந்து வருகிறது. இதனால், இயங்கும் ஒரு சில பேருந்துகளில் ஏறக்கூட பொது மக்கள் அச்சமடைகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி ஜனவரி 11ம் தேதி (நாளை) முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் 6 மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன், மத்திய போக்குவரத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுப்பட இருப்பதால் வேலை நிறுத்தம் போராட்டம் பல மடங்கு தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

மேலும், பொங்கல் பண்டிகையும் நெருங்கி வருவதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You'r reading போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் நாளை முதல் போராட்டம் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை