வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை- தென் தமிழகத்தில் மழை எச்சரிக்கை!

Rain alert Tamilnadu Weather report

by Devi Priya, Dec 1, 2018, 12:04 PM IST

தென் தமிழகத்தையொட்டியுள்ள வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் பரவி உள்ளது.

இதன் காரணமாக வருகிற 4-ந்தேதி முதல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 4, 5-ந்தேதிகளுக்கு மட்டும் வடதமிழகத்துக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழையானது வட மாவட்டங்களில் நிலவும் பற்றாக்குறை மழை அளவை ஓரளவுக்கு ஈடுசெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

You'r reading வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை- தென் தமிழகத்தில் மழை எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை