நான் குடிகாரியாக இருந்தால் உங்களுக்கு என்ன? ட்விட்டரில் இடைவிடாமல் கொந்தளிக்கும் பிக்பாஸ் காயத்ரி

Gayathri new twitter controversy

by Mathivanan, Dec 2, 2018, 13:36 PM IST

தாம் ஒரு குடிகாரியாக இருந்தால் அது தம்முடைய பிரச்சனை.. தம்முடைய குடும்பத்தாருக்கு உண்மை தெரியும் என பிக்பாஸ் நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கொந்தளித்திருக்கிறார்.

சென்னையில் அதிகாலையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி போலீசில் காயத்ரி சிக்கியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை காயத்ரி ரகுராம் மறுத்து வருகிறார்.

மேலும் பாஜகவின் இளைஞரணியினரே இது போல் அவதூறுகளை பரப்புவதாகவும் காயத்ரி கூறியிருந்தார். அதேநேரத்தில் காயத்ரி ரகுராம், பாஜகவில் இல்லை என அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவிக்க அவருடனும் மல்லுக்கட்டினார்.

தற்போது தாம் ஒரு குடிகாரியாக இருந்தால் அது என்னுடைய பிரச்சனை; என் குடும்பத்தினருக்கு உண்மை தெரியும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் 45 நாட்கள் ஐயப்ப விரதம் இருக்கப் போவதாகவும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவும் சர்ச்சையாக, தாம் விரதம் மட்டும்தான் இருக்கப் போகிறேன்... சபரிமலைக்குப் போகவில்லை என ஜகா வாங்கியிருக்கிறார் காயத்ரி ரகுராம்.

You'r reading நான் குடிகாரியாக இருந்தால் உங்களுக்கு என்ன? ட்விட்டரில் இடைவிடாமல் கொந்தளிக்கும் பிக்பாஸ் காயத்ரி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை