தஞ்சை கோயிலில் மதம் சார்ந்த நிகழ்ச்சியா? விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம்!

Tanjore temple religious based program viduthalai siruthaigal party protest

by Devi Priya, Dec 6, 2018, 18:59 PM IST

தஞ்சை பெரிய கோயிலில் டிசம்பர் 7,8 தேதிகளில் நடக்கவிருக்கும் தனியார் நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலில் தனிப்பட்ட மதம் சார்ந்த "வாழும் கலை" என்ற அமைப்பு டிசம்பர் 7,8 தேதிகளில் நிகழ்ச்சி நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தக் கோயிலைப் பாழ்படுத்துவதற்கே அது வழிவகுக்கும்.

மேலும், அங்கு நடத்தவிருக்கும் ஆன்மீக பயிற்சி வகுப்பிற்கு ரூ.3000 கட்டணம் வசூலிக்கப்படுதாகவும் தெரிய வந்துள்ளது. வணிக நோக்கம் கொண்ட அத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்காக கோயிலின் உள்ளே தடுப்புகள் அமைத்து அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது .


ஆன்மீகப் பயிற்சி வகுப்பு நடத்தப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. நபர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. வணிக நோக்கம் கொண்ட அத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்காக கோயிலின் உள்ளே தடுப்புகள் அமைத்து அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது .

தமிழக அரசின் தொல்லியல் துறையின் ஒப்புதலின்றி , மத்திய அரசின் தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிகிறது.

யமுனை நதிக்கரையில் "உலகப் பண்பாட்டுத் திருவிழா" என்று கலாச்சார நிகழ்ச்சி நடத்தியபோது அந்த நதியின் கரையைச் சேதப்படுத்தியதற்காக ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த "வாழும் கலை" அமைப்புக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

எனவே டிசம்பர் 7&8 தேதிகளில் நடக்கவுள்ள அந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

You'r reading தஞ்சை கோயிலில் மதம் சார்ந்த நிகழ்ச்சியா? விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை