தேர்தல் முடிவுகளுக்கு பிறகு உயரத் தொடங்கியது பெட்ரோல் விலை

Petrol prices started rising after the election results

by Isaivaani, Dec 13, 2018, 14:07 PM IST

கடந்த 57 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை இன்று உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 57 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக வேதனையடைந்தனர்.

இதன் பிறகு, 57 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் இன்று, பெட்ரேவிலை உயர்ந்தது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து ரூ.72.94 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக டீசலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

You'r reading தேர்தல் முடிவுகளுக்கு பிறகு உயரத் தொடங்கியது பெட்ரோல் விலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை