டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் இடையே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது: இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் எதிரொலியால், சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளுக்கு நாளை முற்பகல் வரை செல்ல வேண்டாம். 2 நாட்களுக்கு பிறகு, மழை படிப்படியாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.