2019-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவில் 2019 - புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காலையில் தமிழர்கள் குடும்பத்துடன் அங்குள்ள ஆலயங்களில் வழிபாடு நடத்தி புத்தாண்டு தீர்மானம் எடுத்து கொண்டாடினர். நள்ளிரவில் மலேசிய தலைநகரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ணமிகு வாணவேடிக்கைகளுடன் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் மகாதீர் பங்கேற்றார்.
இதில் 4 லட்சத்திற்கும் மேலான பொது மக்களும் பங்கேற்று புத்தாண்டை ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.