கேரளாவுக்கு அரிசி கடத்தவே இருமுடி- சுப.வீ பேச்சால் இந்துத்துவா அமைப்புகள் கொந்தளிப்பு

சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டுகிறோம் என்ற பெயரில் கேரளாவுக்கு அரிசி கடத்தப்படுவதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை பெரியார் திடலில் பேரா.சுப. வீரபாண்டியன் பேசிய வீடியோ:

இதை கடுமையாக விமர்சித்து பல்வேறு பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதில் ஒரு நீண்ட நாகரிகமான பதிவு இது:


1960-களிலிருந்து ஐயப்ப பக்தர்களால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இருமுடியில் அரிசி கடத்தியதாக சுப. வீரபாண்டியன் (தி.க) பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் காணக் கிடைக்கிறது.

சிறுபான்மையினரின் உதவியில் வயிறு வளர்க்கும் இவரை போன்ற ஆட்கள் இப்படித்தான் பேசுவார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்துக்களை பற்றி மட்டும் பல வருடங்களாக பேசிக் கொண்டிருக்கும் கால்டுவெல்லின் திராவிட வாரிசுகள் இவர்கள்.

இவர்கள் சர்ச்களில் நடக்கும் பாவமன்னிப்பு விவகாரத்தை பேசமாட்டார்கள். முதியவர்களின் எலும்பு திருடும் பாதிரிகளைப் பற்றி பேசமாட்டார்கள். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை பற்றி பேசமாட்டார்கள்.

வாரணாசிக்கு துர்கா ஸ்டாலின் ஏன் சென்று வந்தார்கள் என்பதை பற்றி கூட பேசமாட்டார்கள். ஏன்? எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்கு....

இந்துக்களிடம் மட்டும் தான் இவர்களின் பகுத்தறிவு வேலை செய்யும். உண்மையான இந்துக்கள் இந்த பகுத்தறிவு வியாதிகளை எப்போதோ புறக்கணித்துவிட்டார்கள்.

நம்முடைய கேள்வியெல்லாம் நடுசென்டர் இந்துக்கள் மற்றும் திராவிட இயக்கங்களில் உள்ள இந்துக்களுக்கு தான்.

நடுசென்டர் மற்றும் திராவிட இயக்கங்களில் உள்ள இந்து ஐயப்ப பக்தர்களே,

சுப. வீயின் இந்த நக்கல் பேச்சு உங்களை எவ்வகையிலும் பாதிக்காது என்பது உலகறிந்த உண்மை. ஏனென்றால், உங்கள் பக்தியே போலித்தனமானது தானே.

உங்களின் ஐயப்ப பக்தி உண்மையென்றால் மீண்டும், மீண்டும் இந்து உணர்வுகளை அசிங்கப்படுத்தும் திராவிட இயக்கங்களை எப்போதோ நீங்கள் புறக்கணித்திருப்பீர்கள். ஆனால், அவர்கள் எப்படி காறித்துப்பினாலும் அதை துடைத்துவிட்டு அவர்களை தொடர்ந்து ஆதரிக்கும் போது, அவர்கள் உங்கள் முகத்தில் தொடர்ந்து சிறுநீர் கழித்துக் கொண்டு தான் இருப்பார்கள். நீங்களும் துடைத்துவிட்டு அடுத்தடுத்து மலைக்கு மாலை போட்டுக் கொண்டேயிருப்பீர்கள். நீங்கள் இருக்கும் தையிரித்தில் தானே தொடர்ந்து இந்துமதத்தை இவர்கள் அசிங்கப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

திராவிட கட்சிகளால் கிடைக்கும் குறுகிய கால ஆதாயங்களுக்காக நீங்கள் தொடர்ந்து நடுநிலை வேடம் போடுவது உங்கள் விருப்பம். ஆனால், இந்துக்கள் அனைவரும் பக்தியுடன் உளமாற வணங்கும் தெய்வங்களை, இந்து நம்பிக்கைகளை அவர்கள் கொச்சைப்படுத்தும் போது அவர்கள் மீது வர வேண்டிய கோபத்திற்கு பதிலாக, நடுநிலை பேசும் உங்கள் மீது எங்களுக்கு கோபமும், வருத்தமும் வருவது இயல்பு தானே. உங்கள் இறை பக்தி வெளிவேஷம் என்பது உண்மை தானே?

நடுநிலை இந்துக்களே, உங்களிடம் உண்மையான இந்துக்கள் கேட்க விரும்பும் கேள்விகள்.....

எத்தனை தலைமுறையாக உங்கள் குடும்பங்களில் இருந்து சபரிமலைக்கு சென்று வருகிறீர்கள்? இதுவரை எத்தனை மூட்டை அரிசி இருமுடியில் வைத்து கேரளாவிற்கு கடத்தியுள்ளீர்கள்? வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இருமுடி கட்டி அரிசி கடத்தி வருமானம் பார்ப்பது மட்டும், வருடத்தின் மீதி நாட்களில் குடும்பம் நடத்த போதுமா? இன்றைக்கு நீங்கள் நன்றாக இருப்பதற்கு காரணம் இருமுடி மூலம் கேரளாவிற்கு அரிசி கடத்தி சம்பாதித்தது தானா? இல்லை, ஐயப்பனின் அருளா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சுப.வீ இந்த கேள்விகளை உங்களை பார்த்து கேட்கும் காலம் விரைவில் வரும்.

இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!