திருவாரூர் இடைத்தேர்தல்-அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்ட பிறகே அறிக்கை அளிக்க வேண்டும்: மு.கஸ்டாலின்

MKstalin says Thiruvarur Election should be report after hearing comments from political parties

by Isaivaani, Jan 5, 2019, 12:01 PM IST

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த முடியுமா என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹ¨ கேட்டிருக்கிறார்.

இதற்கு கருத்து தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading திருவாரூர் இடைத்தேர்தல்-அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்ட பிறகே அறிக்கை அளிக்க வேண்டும்: மு.கஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை