ஜன. 17... கிட்னி மாற்று ஆபரேஷனுக்கு நாள் குறித்த டாக்டர்கள்... விஜயகாந்த் நிலையால் கலங்கிய பிரேமலதா

Advertisement

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அவருக்கு வரும் 17ம் தேதி முக்கிய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. இந்த சிகிச்சை நல்லபடியாக நடக்க வேண்டும் என கோவில் கோவிலாக வேண்டிக் கொண்டிருக்கிறாராம் பிரேமலதா.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மருத்துவ சிகிச்சையில் இருந்த அதேகாலட்டகத்தில் விஜயகாந்த் உடல்நிலையும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதற்காக, வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து வந்தார்.

கருணாநிதி இறந்த நேரத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் விஜயகாந்த். இதனால் கருணாநிதியின் இறுதி அஞ்சலியிலும் அவரால் கலந்துக் கொள்ள முடியவில்லை.

அமெரிக்காவில் இருந்த படியே வாட்ஸ்அப் வீடியோ மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். சிகிச்சை முடிந்த பின்பு சென்னை திரும்பியதும் நேராக மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அந்தநேரம் உடல்நலம் முடியாமல் மிகவும் பொறுமையாக மனைவியின் துணையுடன் நடந்த காட்சிகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், விஜயகாந்த் இரண்டாம் கட்ட உயர் சிகிச்சைகாக கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் அவரது மனைவி பிரேமலதா, 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர். அங்கு, ஒரு மாத காலம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த சிகிச்சை பற்றி பேசிய அவரது மகன் விஜய பிரபாகரன், ' நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்கிறார்.

வரும் தேர்தலில் அவர் புத்துணர்ச்சியுடன் பிரசாரம் செய்வார்' என நம்பிக்கையோடு பேட்டி கொடுத்திருந்தார். டாக்டர் தமிழிசையும், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக செய்திகள் மூலம் அறிந்தேன்.. சகோதரர் அவர்கள் பூரண உடல்நலம் பெற்று குணமடைந்து திரும்பி மக்கள் பணிதொடரவேண்டி உளமாற வேண்டி பிராரத்திக்கிறேன்.அவரது பயணம் வெற்றிகரமாக அமையட்டும் என பாஜக வாழ்த்துகிறது எனக் கூறியிருந்தார்.

அமெரிக்க சிகிச்சை குறித்துப் பேசும் தேமுதிக பொறுப்பாளர்கள், 'கேப்டனால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. போரூர் ராமச்சந்திராவில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் டயாலிஸில் செய்யும் அளவுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. இதனை சரிசெய்வதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. பிரேமலதா எதிர்பார்க்கும் சிகிச்சையைக் கொடுக்க, குறைந்தபட்சம் 2 வாரங்களாவது அப்சர்வேசனில் வைத்திருக்க வேண்டுமாம்.

உடனே ஆபரேஷன் செய்வது கேப்டன் உடல்நிலைக்கு நல்லதல்ல என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதனால்தான் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு டிசம்பர் மாதம் கிளம்பினார்கள். வரும் ஜனவரி 17ம் தேதி கிட்னி தொடர்பான முக்கிய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. மருத்துவ சிகிச்சை முடிந்து நல்லபடியாக கட்சி அலுவலகம் வருவார் எங்கள் கேப்டன்' என்கிறார்கள் கண்ணீருடன்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>