மோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

Advertisement

கடந்த நான்கரை ஆண்டு காலமாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன் தி.மு.க ஒரு போதும் கூட்டணி வைக்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வாஜ்பாய் கலாச்சாரத்தை பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக் சின்றன என்று பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மிக் பேசியது வியப்பாகவும், விசித்திரமாகவும் உள்ளது. கடந்த நான்கரை ஆண்டில் இந்திய ஒருமைப்பாட்டை பலப்படுத்தவோ, வலுப்படுத்தவோ எந்த வகையிலும் உதவாத வெறுப்புப் பேச்சுகளை விதைத்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களின் நண்பன் என்று கூறிக்கொண்டே சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விட்டனர்.தமிழக நலன்களை அடியோடு புறக்கணித்து கூட்டாட்சி தத்துவத்திற்கு உலை வைத்து விட்டனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் அனைத்தையும் தலை சாயவைத்து விட்டார் மோடி. இப்படிப்பட்டவர் தன்னை, "சரியான மனிதர் தவறான கட்சியில் இருக்கிறார்" என தலைவர் கலைஞரால் வர்ணிக்கப்பட்ட வாஜ்பாயோடு ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கை, விநோதம். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி தேவை என்ற உன்னத நோக்கத்தில் பா.ஜ.கவும் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து உருவாக்கிய வாஜ்பா யுடன் திமுக கூட்டணி வைத்தது.

பின்னர் மதவாதம் எழுந்த போது அக் கூட்டணியில் இருந்து துணிச்சலுடன் வெளியேறியதும் திமுகதான் என்பதை நாடறியும். ஆனால் தற்போது பிரதமர் மோடி வாஜ்பாயும் அல்ல.மோடி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போல் ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. முன்பு எந்தப் பிரதமரும் ஆட்சி செய்த போது இல்லாத அளசுக்கு தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டது மோடி ஆட்சியில்தான்.

மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள், எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற விபரீத மனப்பான்மையில் கடந்த நான்கரை ஆண்டு காலமாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன் இனி ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>