ஒரு மரம் வெட்டினால் 20 மரங்களை நட வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்கு பதிலாக 20 மரங்களை நட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் நகராட்சி ஜே.என்.சாலையில் கடந்த ஆண்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிக்கு இடையூறாக புளியமரம் ஒன்று இருப்பதால் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியை சேர்ந்த சிலர் புளியமரத்தை அகற்றிவிட்டு, கால்வாய் அமைக்கும் பணியை முடிக்க உத்தரவிடும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர். அதில், “கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு இடையூறாக உள்ள புளியமரத்தை அகற்றுவதற்கு அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள 3 பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். புளியமரத்தை அகற்றக்கூடாது என்று கூறுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

எனவே, அந்த புளியமரத்தை அகற்றுவதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றப்படும் புளியமரத்திற்கு பதிலாக அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிக்கு பாதகம் வராத வகையில் 20 மரங்களை மாவட்ட நிர்வாகமும் நட வேண்டும். மரத்தை அகற்றிய 2 மாதங்களுக்குள் கழிவுநீர் கால்வாய் பணியை முடிக்க வேண்டும் ” என்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!