பிட்காயின் மீது ஆசிய நாடுகள் விதித்துள்ள தடை மற்றும் கட்டுப்பாடுகள்...

2017-ல் பிட்காயினின் அபரிவிதமான வளர்ச்சி மற்றும் ஏற்ற இறக்கங்கள், உலக அளவில் பல முதலீட்டாளர்களை தன் பக்கம் இழுத்தது. குறிப்பாக ஆசிய நாடுகளை சேர்ந்த பல முதலீட்டாளர்கள் இதில் இழுக்கப்பட்டனர்.
தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், பிட்காயின் முதலீட்டில் முக்கிய இடங்களாக இருந்தன.
பிட்காயின்களை வைத்திருப்பதால் வரும் சிக்கல்கள் குறித்து  அந்நாடுகள் கவலை கொண்டுள்ளன. அதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
முதல்கட்டமாக கடுமையான விதிமுறைகளை கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அப்படி கோதாவில் இறங்கிய ஆசிய நாடுகளையும், அதன் நடவடிக்கைகளையும் பற்றி சுருக்கமாக பார்ப்போம்:
முதலில் சீனா...
கடந்த ஆண்டு செப்டம்பரில், சீன அதிகாரிகள், தங்கள் நாட்டில் இயங்கி வந்த, அனைத்து பிட்காயின்களில் பங்குச் சந்தைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டனர்.
அதே மாதம், அவர்களின் மத்திய வங்கி, தங்களின் டிஜிட்டல் பணங்களை விற்று, அதன்மூலம் பணத்தை அதிகரிக்க முயன்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை குறித்து கண்டறிய ஆரம்பித்தது. 
அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது என்றும் அறிவித்தது.
பிட்காயின்களை உருவாக்க அதிக மின்சாரமும் தேவைப்படுகிறது என்பதால், இந்த மாதம் பிட்காயின்களை உருவாக்குவோரின் மின்சார இணைப்பை துண்டிக்க, சீனா முடிவு செய்துள்ளது. 
இதன்மூலம், நாட்டின் குறைந்த விலை மின்சாரம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.
டிஜிட்டல் பணங்களை தடுக்க, சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளின் அண்மை நகர்வு இதுவாகும்.
சீன அரசு, பிட்காயின்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்புவரை, உலகளவில் தயாரிக்கப்பட்ட பிட்காயிகளில் 70 சதவிகிதம் சீனாவிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியா...
சீனாவின் நடவடிக்கைகளுக்குப் பிறகு, உலகளவில் மூன்றாவது பெரிய பிட்காயின்கள் கொண்ட சந்தையாக தென்கொரியா மாறியது. கடந்த ஆண்டு, சீனா பின்வாங்கத் தொடங்கியதும், செப்டம்பர் மாதத்தில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக பிட்காயின்களை தென்கொரியா வாங்கியது.
அதுமுதல், அந்நாட்டு அதிகாரிகள், மின்னணு பணங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், சீனாவைப் போலவே, தென்கொரியாவும், மின்னணு பணத்தை மக்கள் வழங்குவதை தடை செய்தது.
அடுத்த மூன்று மாத்ததில், பிட்காயின்களில் பங்குச் சந்தைகளை மூடுவது குறித்து சிந்தித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியதோடு, பெயர் வெளியிடாத டிஜிட்டல் பணங்களின் பரிவர்த்தனையையும் தடை செய்தது.
தென்கொரியாவில் யூபிட் பங்குச்சந்தை, சைபர் தாக்குதலுக்கு உள்ளானபோது, தனது சொத்தில் 17 சதவிகிதத்தை இழந்ததோடு, பணமில்லாமல் பங்குச்சந்தை மூடப்பட்டது. இந்த நிகழ்வே, இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்தது.
இந்த மாத்தில் அரசு அதிகாரிகள், வாடிக்கையாளர்களுக்கு பின்காயின் போன்ற மின்னணு பணங்களுக்கான வங்கிக்கணக்கை தொடங்க உதவும் ஆறு வங்கிகளை சோதனை செய்துள்ளது.
டிஜிட்டல் பணத்தில், ஒழுங்குமுறையை கொண்டுவர, சீனா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செயல்படவும் தென்கொரியா திட்டம் வைத்துள்ளது என்கிறது சியோல் நகரைச் சேர்ந்த யோஹப் செய்தி நிறுவனம்.
இந்தோனேஷியா...
டிஜிட்டல் பணம் மூலமாக, தொகைகளை செலுத்துவதை, இந்தோனேஷியாவின் மத்திய வங்கி தடைசெய்துள்ளது. ஆனால், இதன்மூலமாக நடத்தப்படும் பணப்பரிவர்த்தனை மற்றும் `மைனிங்` என்று குறிப்பிடப்படும் பிட்காயின் தயாரித்தல் முறைகளுக்கு இன்னும் தடைவிதிக்கப்படவில்லை.
இந்த புதிய சட்டம், ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்க வந்துள்ளதாக, ஜப்பானை சேர்ந்த நிக்கை ஏஷியன் ரிவ்யூ என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கதேசம்...
பிட்கானை பயன்படுத்துவோருக்கு, அரசின் பண ஏய்ப்பு சட்டத்தின்கீழ், 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று 2014ஆம் ஆண்டு, மத்திய வங்கி தெரிவித்தது. அதைத் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தில், வங்கதேசத்தின் மத்திய வங்கி, பிட்காயின்களுக்கு தடை விதித்ததாக, உள்ளூர் ஆங்கில பத்திரிக்கையான டாக்கா டிரிபியூன் செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தது.
பிட்காயின்கள் மூலமாக, பணம் செலுத்துவோர், "பண ஏய்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகிய அரசுக்கு எதிரான குற்றங்கள் செய்வதாக எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பரிவர்த்தனை மற்றும் `மைனிங்` ஆகிய விஷயங்களுக்கு வங்கி அனுமதிக்கிறதா என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை.
எனினும், வங்கி இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், ஜூன் மாதத்தில் ஒரு குழு அமைத்து, கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன், வங்கதேசத்தில் பிட்காயின்கள் பயன்படுத்த வழிவகைகள் செய்ய உள்ளதாகவும், கடந்த டிசம்பர் மாதம் வங்கியின் இணை- இயக்குநர் எஸ்.கே. சுர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
வியட்நாம்....
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக, சட்டப்படியான ஒரு வழிமுறையை உருவாக்கும் திட்டத்திற்கு, வியட்நாம் பிரதமர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அனுமதி அளித்தார். இதன்மூலம், மின்னணு பணப்பரிமாற்றத்தை அவர்கள் விரைவில் சட்டரீதியாக்க கூடும் என்ற நம்பிக்கையை அது அதிகரித்துள்ளது.
அவர்களின் பிரதமர் ஃபூக், 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்த பணங்களை நெறிபடுத்தும் திட்டத்தை, பிற அமைச்சர்களுடன் இணைந்து சட்ட அமைச்சகம் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறியிருந்தாலும், அந்நாட்டில் பிட்காயின்களை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பாணதே. அவ்வாறு செய்வதன் மூலம், 8,800 டாலர்களை வரையில் அபராதம் செலுத்த நேரிடலாம் என்று மத்திய வங்கி அக்டோபர் மாதத்தில், கூறியதாக, வியட்நாம்நெட் பிரிட்ஜ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
வர்த்தகம் என்பது சற்று தொய்வாக இருந்தாலும், மக்கள் இதன்மீது முதலீடு செய்வதை அது தடுக்கவில்லை.
ஜப்பான்....
மற்ற நாடுகள் டிஜிட்டல் பணத்தின்மீது விதிமுறைகளை செலுத்தி வரும் நிலையில், ஜப்பான் அவற்றை இறுக்கப் பிடித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், பிட்காயினை மக்கள் பொருட்கள் வாங்க மற்றும் சேவைக்காக பயன்படுத்த, சட்டரீதியாக அனுமதி அளித்தது.
ஆனால், பங்குச்சந்தைகள் இவற்றை வைத்து பரிவர்த்தனை செய்ய முறையே உரிமம் பெற வேண்டும். இந்த சட்டத்தின்கீழ், ஒவ்வொறு ஆண்டும் அவர்கள் பரிவர்த்தனை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
முதலீட்டாளர்கள் அரசாங்கத்தை ஏமாற்ற முடியாதவாறு,
இங்கு நாம் ஆதார் கார்டு, பான் கார்டு பயன்படுத்துவது போன்று, கடுமையான கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு விதித்துள்ளது.
பிட்காயினை போன்று ஜப்பானில் டோஜிகாயின் என்ற கிரிப்டோகாயின் உள்ளது. மற்றும் புகைப்பட நிறுவனமான ஈஸ்ட்மேன் கோடாக், தங்களின் சொந்த பணமான கோடாக்காயினை கொண்டுவர திட்டமுள்ளனர்.
இந்தியா...
இந்தியாவில், பிட்காயின்கள் சட்டவிரோதமானவையும் அல்ல, அவற்றின் பரிவர்த்தனையும் முடக்கப்படவில்லை.
எனினும், மத்திய வங்கியும், அரசும், டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் உள்ள சிக்கல்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம், டிஜிட்டல் பணத்திற்கான நெறிமுறைகளை கொண்டுவர, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து அரசு மற்றும் மத்திய வங்கியிடம், நீதிமன்றம் விளக்கம் கேட்டது, நிதியமைச்சர் அருன் ஜேட்லி அது சம்பந்தமான விளங்கங்களை அளித்தார், அதுபற்றி நாம் முந்தின கட்டுரையில் வாசித்திருப்போம்.
ஆனால், மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் பிட்காயினுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பது குறைவே. அதே சமயம் பின்காயின் மீது முதலீடு செய்பவர்களும் குறைவுதான் என்பதால், தற்போதைக்கு நாம் அதுபற்றி கவலை படத் தேவையில்லை.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
welsh-river-runs-white-after-milk-tanker-overturns
பால் ஆறாக மாறிய டுலைஸ் ஏரி
new-zealand-suspends-entry-of-travellers-from-india-amid-covid
இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தடை
exit-the-us-force-iraq-joins-hands-with-iran-trump-on-the-sidelines
அமெரிக்க படையே வெளியேறு! ஈரானோடு கைகோர்த்த ஈராக்-விழிபிதுங்கி நிற்கும் டிரம்ப்.
Tamil-Sangam-Arranged-Pongal-festival-in-America
அமெரிக்காவில் தமிழ்ச்சங்கத்தின் மாபெரும் தைப் பொங்கல் திருவிழா
The-first-Indian-to-head-International-Advertising-Association
பன்னாட்டு விளம்பர கூட்டமைப்பின் (IAA) தலைவரான முதல் இந்தியர்
9000-Indians-arrested-in-America
அமெரிக்காவில் 9000 இந்தியர்கள் அதிரடி கைது
New-deportation-rule-in-US-starting-next-week-may-hit-Indians
இந்தியர்களின் அமெரிக்க கனவு முடிவுக்கு வருகிறதா ?
Thanthai-Periyar-140th-birthday-celebration-in-California
கலிபோர்னியாவில் பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
US-Green-Card-New-Rule-Be-Effective-on-Indians
அமெரிக்க கிரீன் கார்டு: இந்தியர்களை பாதிக்கும் புதிய விதி நடைமுறைக்கு வருமா?
PERIYAR 140th BIRTHDAY CELEBRATION IN BAY AREA
PERIYAR 140th BIRTHDAY CELEBRATION IN BAY AREA
Tag Clouds