ஜெ. கிளினிக்கலாக செத்தது வேறு பயாலஜிக்கலாக செத்தது வேறு - திவாகரன் புது விளக்கம்

Advertisement

ஜெயலலிதா உயிரிழந்தது தொடர்பான எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று சசிகலா சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டதாக சசிகலா சகோதரர் திவாகரன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மன்னார்குடியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய திவாகரன், ”நான்காம் தேதி இரவு மருத்துவமனைக்குச் சென்றேன். அன்று மாலை 5.15 மணிக்கே முதல்வர் மாரடைப்பில் இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.

அதன் பிறகு இயந்திரங்களில்தான் அவர் வைக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையின் இயக்குனர் பிரதாப் ரெட்டியிடம் அது குறித்து கேட்டபோது, தமிழகம் முழுவதும் உள்ள தங்களது மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்டார்” என்று கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசைச் சேர்ந்த ஒருவர் அப்போது மருத்துவமனையில் இருந்ததாகவும் அவருக்கு இது குறித்துத் தெரியும் என்றும் திவாகரன் கூறியிருந்தார்.

இந்நிலையில், தான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக திவாகரன் கூறியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், “டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அன்றைய தினம் கிளினிக்கலாக தான் ஜெயலலிதா இறந்தார். ஆனால், டிசம்பர் 5ஆம் தேதி பயாலஜிக்காலாக இறந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>