இயற்கை விவசாயம் இன்றியமையாதது... கார்த்திகேய சிவசேனாபதியின் சிறப்புப் பேட்டி! (வீடியோ)

Advertisement

அமெரிக்காவின், மினசோட்டாவிலுள்ள ‘டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மையத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டார்.

Karthikeya Sivasenapathy

சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்த அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், நமது நிருபர் ரமேஷ் வெங்கடசாமி கார்த்திகேய சிவசேனாபதியுடன் ஓர் சிறப்பு நேர்காணல் நடத்தினார்.

அதில், தாம் மேற்கொண்டுவரும் பல்வேறு பணிகள் குறித்து சிவசேனாபதி விளக்கினார். குறிப்பாக இயற்கை விவசாயம் பற்றியும், அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின்னர் தமிழர்களிடம் சமூக விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த அவர், தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், சிறுதானிய உணவுமுறை இன்றியமையாத ஒன்று என்பதை சுட்டிக்காட்டினார். இதேபோல பல்வேறு கேள்விகளுக்கு அவர் இன்முகத்துடன் பதிலளித்தார்.

அந்தப் பேட்டியின் வீடியோ,

Advertisement
/body>