தடகள உலகின் “மின்னல் மனிதன்” என அழைக்கப்படும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட் ஓட்டப்பந்தயப் போட்டிகளின் (100 மீ,200 மீ,4×100) முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர்.
ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்த உசேன் போல்ட் கடந்த 2017-ஆம் ஆண்டு ஓட்டப்பந்தயப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது உசேன் போல்ட்டுக்கு கால்பந்து மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு அதற்காக தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளார். மேலும் கால்பந்து கிளப் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதுகுறித்து உசேன் போல்ட் கூறியதாவது, “தொழிற்முறை கால்பந்தாட்ட வீரராக வேண்டுமென்பது எனது கனவு. எனது கவனம் முழுவதும் கால்பந்தில் கரைந்து விட்டது. இதற்காக நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறேன். நான் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுடன் விளையாட உள்ளேன்” என கூறியுள்ளார்.
உசைன் போல்ட் இங்கிலாந்து நாட்டு கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.