அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே இல்லாத சாதனை: செனெட் சபைக்கு இ-மெயில் சிவா அய்யாதுரை ?

அமெரிக்கவாழ்  இந்தியர்கள் இருவர் அமெரிக்கத் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தேர்தல் நிதியை அள்ளிச் சேகரித்துள்ளனர்.

அமெரிக்க செனெட் சபைக்கான தேர்தலில் மாசசூசெஸ்டஸ் மாகாணத்திலிருந்து போட்டியிடுகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிவா அய்யாதுரை. இன்று உலக மக்களின் தகவல் தொடர்பு விஞ்ஞானத்தில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கும் 'இ-மெயில்' கண்டுபிடிப்பாளர்தான் இந்த சிவா அய்யாதுரை.

சுயேச்சையாகப் போட்டியிடும் 54 வயதான சிவா அய்யாதுரை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எலிசெபெத் வாரனை எதிர்த்து நிற்கிறார். விரைவில் நடைபெறவிருக்கும் செனெட் தேர்தலுக்காக 'சிவா 4 செனெட்' (Shiva 4 Senate) என்கிற பிரச்சார திட்டத்தின் மூலம் இதுவரையில் 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சிவா அய்யாதுரைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேரிலேண்ட் பகுதியில் இருந்து காங்கிரஸ் சபைக்கான தேர்தலில் போட்டியிடும் அருணா மில்லர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகப் பெற்றுள்ளார். அருணா மில்லர் வெற்றி பெறும் சூழலில் அமெரிக்கக் காங்கிரஸ் சபையில் இடம்பெறும் இரண்டாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 - thesubeditor.com

Advertisement