வாபஸ் பெறப்பட்ட திரையுலக ஸ்டிரைக்… கேப்டனின் முத்தான அட்வைஸ்!

by Rahini A, Apr 18, 2018, 21:01 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரையுலக ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது குறித்து ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களிடம் டிக்கெட் கட்டணத்துக்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும். டிக்கெட் கட்டணத்தை படத்துக்குத் தகுந்தாற்போல் விதிக்கப்பட வேண்டும்.

மேலும், அனைத்துத் தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு படத்தின் உண்மையான வசூலை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இதனால், எந்தப் படமும் அன்று முதல் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை.

ஆனால், இன்று தமிழக அரசு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த், `திரையுலகில் 48 நாட்களாக நீண்டிருந்த பிரச்சனை சுமுக தீர்வு எட்டப்பட்டது என்பதையறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

திரையுலகில் உள்ளவர்கள், கலையுலக பிரச்சனைகள் அனைத்தையும் தமது பிரச்சனையாக எடுத்துக்கொண்டு ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்’ என்று முத்தான அட்வைஸ் ஒன்றையும் உதிர்த்துள்ளார் கேப்டன்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வாபஸ் பெறப்பட்ட திரையுலக ஸ்டிரைக்… கேப்டனின் முத்தான அட்வைஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை