தோல்விதான், ஆனால் தோற்கவில்லை!- அமெரிக்க தேர்தலில் கலக்கிய இந்தியர்!

அமெரிக்காவின் அரிசோனா மாகாண இடைத்தேர்தலில் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை நலுவவிட்டுள்ளார் அமெரிக்கவாழ் இந்தியப் பெண் மருத்துவர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் முற்றிலும் குடியரசுக் கட்சியின் கோட்டையாகத் திகழ்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வேட்பாளர் ஒருவரை கண்டிப்பாக நிறுத்தியே ஆக வேண்டுமா என்று கூட ஜனநாயகக் கட்சி நினைத்தது உண்டு.

ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற அரிசோனா மாகாண இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஹிரால் டிப்ரினேனி ஒரு அமெரிக்கவாழ் இந்தியப் பெண் மருத்துவர் ஆவார்.

கடந்த ஆண்டைவிடவும் ஜனநாயகக் கட்சிக்கும் அதிக வாக்கு விகிதத்தைப் பெற்றுக்கொடுத்து தேர்தலில் தோற்றாலும் கட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளார் ஹிரால் டிப்ரினேனி என அவருக்கு தோல்வியிலும் செல்வாக்கு சேர்ந்துள்ளது. இது ஜனநாயகக் கட்சிக்கு தோல்வியிலும் ஒரு மிகப்பெரிய ஆறுதலைப் பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement