“வைபிரண்ட் தமிழ்நாடு” மதுரையில் அனைத்துலக உணவு வர்த்தக கண்காட்சி

அனைத்துலக உணவு வர்த்தக கண்காட்சி! அமெரிக்காவில் அறிமுகக் கூட்டங்கள்:

2018 மே 15 (செவ்வாய்) மாலை 4 முதல் 6 மணி வரை, லாஸ் ஏஞ்சல்ஸ்
(La Habra, Holiday Inn La Mirada, 14299 Firestone Blvd, La Mirada, CA)
2018 மே 8 (செவ்வாய்) நியூ ஜெர்ஸி
2018 மே 10, 11 (வியாழன், வெள்ளி) சிகாகோ

மதுரை சிக்கந்தர் சாவடி அருகேயுள்ள உணவுப் பொருள் வணிக வளாகத்தில், அனைத்துல உணவு வர்த்தக கண்காட்சி, 2018 ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழக உணவுப் பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தியாளர்களை ஒரே இடத்தில் திரட்டி, அவர்களை ஊக்குவித்து, ஏற்றுமதி முதல் சந்தைப்படுத்துதல் வரை அவர்களோடு உடனிருந்து, தொழில் வணிகத்தில் தமிழகத்தை முன்னிருத்துவதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும்.

இந்திய அரசின் வர்த்தக துறை மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் ஆதரவுடன், 25,000 ச.மீ பரப்பில் பிரமாண்டமான அரங்கில், இருநூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைய உள்ள இந்தக் கண்காட்சிக்கு ஏறக்குறைய 5 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள், உற்பத்தியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் என அனைவரும் ஒரே மேடையில் சந்திக்க, விவாதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

இந்தியா மற்றும் பத்து நாடுகளிலிருந்து பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் உச்சி மாநாட்டில் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள். இறக்குமதியாளர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யும் வாய்ப்பும் இக்கண்காட்சியில் உண்டு. தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட வாய்ப்பு உண்டு.

இக்கண்காட்சியில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கலந்து கொள்வோருக்கு மூன்று நாட்கள், மதுரையில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதி, மூன்று நாட்களும் மூன்று வேளை உணவு, போக்குவரத்து வசதி, சுற்றுலாதலங்களை பார்க்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்துதரப்படும்.

நல்ல முதலீட்டு வாய்ப்பாகவும், உங்கள் வணிக தொடர்புகளை பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பாகவும் இந்த அனைத்துலக உணவுப் பொருள் கண்காட்சி அமையும். அமெரிக்காவிலிருந்து இக்கண்காட்சி மற்றும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வோர் விமான கட்டணத்தில் புரோமோ குறியீடு பயன்படுத்தி தள்ளுபடி பெற வாய்ப்பு உண்டு.

லாஸ் ஏஞ்சல்ஸ் கூட்டத்தை பற்றிய விவரங்களுக்கு பாலா பெரியசாமியை 714 253 3515, 714 588 0602 தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களில் அல்லது bala@blumerqusa.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கண்காட்சியின் இணையதளம்: www.vibranttamilnadu.com

 - thesubeditor.com

Advertisement