சான் பிரான்சிஸ்கோவில் மக்களை மகிழ்வித்த புஷ்பவனம் குப்புசாமி!

வளைகுடா பகுதி கலிபோர்னியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமியும் அவரின் மனைவி அனிதாவும் கலந்துக் கொண்டு கிராமிய பாடல்களை பாடி அசத்தினார்.

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் கடந்த 5-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பல்வேறு கிராமிய பாடல்களை பாடி அசத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வளைகுடா பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். புஷ்பவனம் குப்புசாமி மேடையில் பாட, நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தமிழர்கள் நடனமாடியும், பாடலுக்கு ஏற்றவாறு கும்மி அடித்தும் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

அப்போது, புஷ்பவனம் குப்புசாமி தமிழை போற்றும் வகையில் பாடல் ஒன்றை பாடினார். அதன் வரிகள் இதோ...

தமிழால் இணைவோம் தமிழ்க் குடியே!
ஆல்போல் தழைப்போம் தமிழ்க் குடியே!
ஐம்பெருங் காப்பியமியற் றியபுலவர் நிறைதமிழே!
பழம்பெரும் தமிழால் சிறப்போம்நாம் வாவுயிரே!
சிங்கத் தமிழர் கூடிவாழும் மண்ணிதுவே! - இங்கு
தமிழைச் சிறுவர் நாளும்கற் றிடவேண்டுமே!
அயலாரும் காதல்கொள்ளும் மொழிதமிழே! - நம்கடமை
யன்றோ கற்றுத் தெளிவது தாய்மொழியை!
மூத்தமொழி களில்மூத்த தன்றோதெள் ளுதமிழ்!
மூத்தகுடி களிலமூத்த தன்றோயெங் கள்குடி!
வான்மறை தந்த வள்ளுவனும் எங்கள்குடி!
வான்புகழ் கொண்ட கம்பநாடனும் எங்கள்குடி!

வாழ்க்கை என்றால் துணை வேண்டும்!
நம்வாழ்வு செழித்திடத் தமிழ் வேண்டும்!
பள்ளியில் தமிழுக் குமிடம் வேண்டும்! - நம்பிள்ளைகள்
நாளுந்தமி ழைப்படிக்க வழிவேண்டும்!
தமிழால் இணைந்து செயல் பட்டால்
வேற்றுமை மறந்து செயல் பட்டால்
தமிழரும் ஆல்போல் தழைத்திடலாம் - பள்ளியில்
தமிழைப் பாடமாய்க் கொணர்ந்திடலாம்!

 - thesubeditor.com

Advertisement