'தோனி போல் யாராலும் இவ்வளவு வேகமாக ஒருவரை பவுல்ட் அவுட் செய்ய முடியாது’ என நம்ம ‘தல’ தோனியின் கீப்பிங் வேகத்தில் கிறுகிறுத்துக்கிடக்கிறார் மைக்கேல் ஹஸ்ஸி.
சச்சினுக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் கடவுள் போஸ்டிங்கை ரசிகர்கள் தோனிக்கு அளித்துள்ளனர். ரசிகர்கள்தான் மயங்கிக் கிடக்கின்றனர் என்றால் சக வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் கூட தோனியின் வேகத்தில் சிக்கி மீள முடியாமல் தான் தவித்து வருகின்றனர்.
தற்போது ஐபிஎல் திருவிழாவில் தல தோனியின் கெத்து மேலும் அதிகரித்தே உள்ளது. இன்றைய நிலவரப்படி தோனியின் சிஎஸ்கே அணி டாப் ஆர்டரில் நிலைத்து நிற்கிறது. இந்தப் புகழுக்குச் சொந்தக்காரர் தோனி.
ரன் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்திலிருக்கும் தோனி, 10 இன்னிங்க்ஸ்களில் 360 ரன்கள் வீதமாக 90 ஆவேரேஜ் என வைத்துள்ளார். தன் ப்ரோபைல் மட்டுமல்லாது தான் சார்ந்த அணியின் ப்ரோபைல் ரேட்டையும் டாப் ஆர்டரிலேயே வைத்துள்ளார் தோனி.
இவரது கீப்பிங் திறன் குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறுகையில், “என்னைப் பொறுத்தவரையில் உலகின் அதிவேக கீப்பராக தோனி உருவாகியுள்ளார். இவர் வேகத்துக்கு யாராலும் ஒரு பேட்ஸ்மேனை பவுல்ட் அவுட் செய்ய முடியாது.
நம்ப முடியாத வேகத்துடன் விளையாடும் தோனி, கீப்பிங் மட்டுமல்லாது பேட்டிங் செய்வதிலும் அசத்தி வருகிரார், இவர் எந்த அனியில் இருந்தாலும் அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரராக தோனி இருப்பார்” என்றார் பெருமிதத்துடன்.