மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஏழாம் கட்ட லீக் போட்டி #MTBC

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் ஏழாம் கட்ட லீக் போட்டி சமீபத்தில் நடைபெற்றது.

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் முதல் வாரம் தொடங்கி ஆகஸ்டு மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.

விளையாட்டின் தொடக்க நாள் முதல் ஒவ்வொறு லீக் போட்டியும் வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆறு லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஏழாவது லீக் போட்டி கடந்த 23ம மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற்றது.

ஒவ்வொரு லீக் போட்டியிலும் 54 அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெற்ற கடந்த ஏழு லீக் போட்டிகளில், முன்னிலையில் இருக்கும் வீரர்கள் குறித்து பார்ப்போம்.

குரூப் c-ன் Smashers அணியை சேர்ந்த சன்னி அமின் மொத்தம் ஏழு லீக் போட்டிகளில் 1265 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இவரை தொடர்ந்து, குரூப் Eன் Dare Devils அணியை சேர்ந்த சுமித் மஹாகுட் 1070 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், குரூப் B-ன் Desi Pandits அணியை சேர்ந்த ஏசுதாசன் 1062 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

இவர்களை அடுத்து, குரூப்-E ன் MN Mavericks அணியை சேர்ந்த யசோதா பப்பிநிதி 7 வார போட்டிகளில் 1039 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திலும், குரூப் D-ன் Champions United அணியை சேர்ந்த சரவணன் சசுரா 1029 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

குரூப்களின் அடிப்படையில் அணிகள் எடுத்துள்ள புள்ளி விவரம்:

குரூப் A:
Indian Colts அணி விளையாடிய 7 போட்டிகளின் அடிப்படையில், 36 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து, Minnesotta Indians அணி 33 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளது.

குரூப் B:
Desi Pandits அணி விளையாடிய 7 போட்டிகளின் அடிப்படையில் 36 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், தொடர்ந்து Indian Knights அணி 36 புள்ளிகள் பெற்று சம நிலையில் உள்ளது.

குரூப் C:
Titans அணி விளையாடிய 7 போட்டிகளின் அடிப்படையில் 36 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, The Warriors அணி 30 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது.

குரூப் D:
Champions United அணி விளையாடிய 7 போட்டிகளின் அடிப்படையில் 36 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், தொடர்ந்து Gujju XI அணி 33 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளன.

குரூப் E:
இந்த குரூப்பில், 11 Dulkars, MN Mavericks அணி தலா 30 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன. தொடர்ந்து, Epic அணி 27 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

குரூப் F:
Eagan Panthers, Rising Warriors ஆகிய அணிகள் விளையாடிய 7 போட்டிகளில் 36 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன. Mighty minns, V Rock, ஆகிய அணிகள் 30 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது.

தொடர்ந்து, லீக் போட்டியின் முடிவில் முதல் 32 இடங்களில் உள்ள அணிகள் அடுத்தகட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், அடுத்த லீக் போட்டி வரும் 30ம் மற்றும் ஜுலை 1ம் தேதிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
welsh-river-runs-white-after-milk-tanker-overturns
பால் ஆறாக மாறிய டுலைஸ் ஏரி
new-zealand-suspends-entry-of-travellers-from-india-amid-covid
இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தடை
exit-the-us-force-iraq-joins-hands-with-iran-trump-on-the-sidelines
அமெரிக்க படையே வெளியேறு! ஈரானோடு கைகோர்த்த ஈராக்-விழிபிதுங்கி நிற்கும் டிரம்ப்.
Tamil-Sangam-Arranged-Pongal-festival-in-America
அமெரிக்காவில் தமிழ்ச்சங்கத்தின் மாபெரும் தைப் பொங்கல் திருவிழா
The-first-Indian-to-head-International-Advertising-Association
பன்னாட்டு விளம்பர கூட்டமைப்பின் (IAA) தலைவரான முதல் இந்தியர்
9000-Indians-arrested-in-America
அமெரிக்காவில் 9000 இந்தியர்கள் அதிரடி கைது
New-deportation-rule-in-US-starting-next-week-may-hit-Indians
இந்தியர்களின் அமெரிக்க கனவு முடிவுக்கு வருகிறதா ?
Thanthai-Periyar-140th-birthday-celebration-in-California
கலிபோர்னியாவில் பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
US-Green-Card-New-Rule-Be-Effective-on-Indians
அமெரிக்க கிரீன் கார்டு: இந்தியர்களை பாதிக்கும் புதிய விதி நடைமுறைக்கு வருமா?
PERIYAR 140th BIRTHDAY CELEBRATION IN BAY AREA
PERIYAR 140th BIRTHDAY CELEBRATION IN BAY AREA
Tag Clouds