அமெரிக்காவில் உள்ள ட்வின் சிட்டீஸ் தமிழ் பாடச்சாலையின் 2018-2019ம் கல்வியாண்டுக்கான வகுப்பு வரும் 8ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வாழ் தமிழர்களுக்காவும், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையிலும் டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலை என்ற பெயரில் தமிழ் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலையில் ஏராளமான தமிழர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலையில், கல்வியாண்டு செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும். அந்த வகையில், இந்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழ் பாடசாலையில் தங்களின் குழந்தைகளை சேர்க்க விருப்பமுள்ளவர்கள், https://www.catamilacademy.org/cta/StudentReg.aspx என்ற இணையத்தளத்தின் கீழ் பெயர் பதிவு செய்துக் கொள்ளலாம்.
டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலையில் மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைளுக்கு பல்வேறு கட்ட வகுப்புகள் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டுவின் சிட்டீஸ் தமிழ் சங்கம் மற்றும் டுவின் சிட்டீஸ் பாடசாலை இணைந்து மாணவர்களுக்கு தமிழ் கல்வி மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி, கலாச்சார நிகழ்ச்சிகள், தமிழ் திறன் போட்டிகள், ஆண்டு விழா நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.
டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலை அமைந்துள்ள இடங்கள் உள்பட மேற்கொண்ட கேள்விகளுக்கு contactus@tctpmn.org என்ற இமெயில் முகவரியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். பேஸ்புக்கில் https://www.facebook.com/TwinCitiesTamilPaadasalai என்ற பக்கத்தை லைக் செய்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் பாடத்திட்டங்கள் குறித்து https://www.catamilacademy.org/cta/login.aspx என்ற முகவரியிலும் மாணவர் திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து http://www.catamilacademy.org/docs/skillset/skillset.pdf என்ற முகவரியிலும் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.