அப்பாடா.. முடிவுக்கு வந்தது எச்1பி விசா விவகாரம்.. பெருமூச்சுவிடும் இந்திய பணியாளர்கள்

Advertisement

அமெரிக்கா: எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் விதமான எந்த ஒரு விதிமுறையும் விதிக்கப்படவில்லை என்று அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நிம்மதியடைந்து பெருமூச்சுவிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘பை அமெரிக்கன் ஹயர் அமெரிக்கன்’ என்ற கொள்கையின் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.

இதில், எச்1பி விசா நீட்டிப்பதிலும், கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த எச்1பி விசா வைத்திருப்பவர்களும் அதற்கு ஒப்பந்தம் கிடைக்கும் வரை அவரவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாடு நிறைவேற்றப்பட்டால் சுமார் ஏழரை லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் அச்சத்தில் இருந்தனர்.

ஆனால், இதுபோன்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற நிர்பந்திக்கும் எந்த ஒரு விதிமுறை மாற்றத்தையும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை பரிசீலிக்கவில்லை. அதற்குரிய சட்டத்தில் இருக்கும் விதியை வேறு வகையில் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என உணரப்படுகிறது. இந்த சட்டத்தின் அசலான விதிப்படி எச்1பி விசா நீட்டிப்பு வழங்க வேண்டும். இதையடுத்து, 6 ஆண்டுகாளுக்கும் கூடுதலாக எச்1பி விசா நீட்டிப்பு வழங்க முடியும்.

இந்நிலையில், விசா நீட்டிப்பை ரத்து செய்யும் எந்த கொள்கையும் குடியேற்றத்துறை பரிசீலிக்காது. அழுத்தம் காரணமாக குடியேற்றத்துறை தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்ற செய்திகள் முற்றிலும் தவறானது.

இதுபோன்ற, எச்1பி விசா கெடுபிடிகள் இந்தியா, அமெரிக்கா என இரண்டுக்குமே மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாஸ்காம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது” என்றிருந்தது.

Advertisement

READ MORE ABOUT :

/body>