வெளியில் சுற்றி வேலை பார்த்துவிட்டு களைத்துப் போய் வீட்டிற்கு வந்து, ஒரு டம்ளர் மாம்பழ லஸ்ஸி குடித்தால் அத்தனை களைப்பும் பறந்துப் போய்விடும். மாம்பழத்தை வைத்து நிறைய ரெசிபிகளை செய்யலாம்.
மாம்பழம் மட்டுமல்ல மாங்காயை வைத்து கூட நிறைய சமையல் செய்யலாம். மாங்காயை வைத்து பொதுவாக அனைவரும் ஊறுகாய் தான் செய்வார்கள். ஆனால், மாம்பழத்தை வைத்து நிறைய இனிப்புகள் மற்றும் ஜூஸ்கள் செய்யலாம்.
மாம்பழத்தை வைத்து பொதுவாக லஸ்ஸி மற்றும் ஷேக் செய்வார்கள். நீங்கள் மாம்பழ லட்டு சாப்பிட்டதுண்டா? இது தனி சுவை கொண்ட இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் மற்றும் மாம்பழ உள்ளதால் சுவை பிரமாதமாக இருக்கும்.
வாருங்கள் இப்போது நாம் மாம்பழ லட்டு செய்வதற்கு தேவையானப் பொருட்களைப் பற்றியும் செய்யும் பற்றியும் விரிவாக பார்ப்போம்...
தேவையானப் பொருட்கள்
மாம்பழ கூழ் - 1/2 கப்
சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப்
தேங்காய் பவுடர் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
நட்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
ஸ்டெப்-1
இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
ஸ்டெப்--2
இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
ஸ்டெப்-3
இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். அந்த பவுடர் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி...