ஷில்பா ஷெட்டி, ஷமீதா ஷெட்டி சகோதரிகளின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சமீதாவின் 40-வது பிறந்த நாளை ஆனந்தமாகக் கொண்டாட சகோதரிகள் இருவரும் குடும்பத்துடன் தாய்லாந்து பறந்துள்ளனர்.
இயற்கை எழில் கொஞ்சும் புக்கெட் தீவின் அழகை ரசித்துக் கொண்டே நாங்கள் ரசித்ததை நீங்களும் ரசிக்க வேணாமா என்பது போல் சமூக வலைதளங்களில் விதவிதமான படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது நீச்சல் உடையில் அம்மணிகள் இருவரும் தண்ணீரில் கும்மாளம் போடும் வீடியோ ஒன்றை ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, நாங்க குளிச்சா தண்ணீரும் சுடுமில்ல.. என்று கமெண்ட் அடித்துள்ளார். இந்த வீடியோ செம கலக்கலாக வைரலாகி வருகிறது.