`சாரட் வண்டி ஊர்வலம் வானில் இருந்தே பாதுகாப்பு - சவுதி இளவரசருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இம்ரான் கான்!

Pakistan has rolled out the red carpet for Saudi Crown Prince Mohammed bin Salman

by Sasitharan, Feb 18, 2019, 18:56 PM IST

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அவரின் வருகையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவம் காரணமாக மூன்று நாள் தாமதத்துக்கு பிறகு பாகிஸ்தான் இளவரசர் சல்மான். பாகிஸ்தானின் முக்கிய நட்பு நாடாக சவுதி விளங்கி வருகிறது.

இதானால் இளவரசர் சல்மானுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் விமானத்தில் வரும்போதே அவர் விமானத்துக்கு பின்புறமாக ராணுவ விமானங்கள் பறக்கவைக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வானிலே இந்தப் பாதுகாப்பு என்றால் தரையில் சொல்லவே தேவையில்லை. முன்பு ஒரு முறை ராணுவ அமைச்சராக இருக்கும் போது சல்மான் பாகிஸ்தான் வந்திருந்தாலும் இப்போது இளவரசராக வருவதால் பாகிஸ்தானின் கவனிப்பு சற்று தூக்கலாகவே இருந்தது என்று சொல்லலாம்.

அதற்கு சான்று தான் சல்மானுக்கு இம்ரான் கான் கார் ஒட்டிய சம்பவம். சல்மான் பாகிஸ்தானில் இறங்கியதும் வழக்கமான அரசின் புரோட்டாகால் நடைமுறைகளுக்கு மாறாக வரவேற்பு நிகழ்வுக்காக பிரதமர் இம்ரான் கானே விமான நிலையம் சென்றார். அங்கு சல்மானுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார். பின்னர் சல்மானை அரசு மாளிகைக்கு கூப்பிட்டு வரும்போது தன்னுடைய காரிலேயே அவரை அழைத்து வந்ததுடன் தானே டிரைவராக இருந்து காரை ஒட்டி வந்தார் இம்ரான் கான்.

வழிநெடுகிலும் சல்மானை வரவேற்று மிகப்பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எல்லாம் ஒருபடி மேலாக பாகிஸ்தானின் மிக உயரிய சிவிலியன் விருதான `நிஷான்-இ-பாகிஸ்தான்’-ஐ சல்மானுக்கு வழங்கி கௌரவப்படுத்தினார் இம்ரான். இன்னும் ஒருபடி மேலாக இருநாட்டு வர்த்தக ஒப்பந்த நிகழ்ச்சியின் போதும் ஒருவரை ஒருவர் மானாவாரியாக புகழ்ந்துகொண்டனர். ``இம்ரான்கானைப் போல ஒரு பிரதமருக்காகத்தான் பாகிஸ்தான் மக்கள் இத்தனை காலம் காத்திருந்தனர். இனி பொருளாதாரம் உட்பட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தான் வளர்ச்சியடையும்.

சவுதியின் அன்பு நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானுக்கு நாங்கள் இல்லை என்று கூற மாட்டோம். எதை வேண்டும் என்று கேட்டாலும் நாங்கள் செய்வோம்" என இளவரசர் சல்மானும், ``பாகிஸ்தான் மக்களின் மனங்களை சவுதி இளவரசர் சல்மான் வென்று விட்டார். நாங்கள் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது எங்களுக்கு உதவியதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பாகிஸ்தான் - சவுதி அரேபியா இரு நாடுகளும் தங்கள் உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்" என்று ஏகத்துக்கும் புகழ்ந்துகொண்டனர்.

முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே 20 மில்லியன் டாலர் மதிப்பிலான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் சவுதி சிறையில் உள்ள 2,107 கைதிகளை ரிலீஸ் செய்யவும் ஒத்துக்கொண்டார் சல்மான். இதற்கிடையே சல்மான் அடுத்து போகவுள்ள ஆசிய நாடு எது தெரியுமா? ஆம் இந்தியா வரவுள்ளார் இளவரசர் சல்மான்.

You'r reading `சாரட் வண்டி ஊர்வலம் வானில் இருந்தே பாதுகாப்பு - சவுதி இளவரசருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இம்ரான் கான்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை