பிகினி ஆடையில் ஆசிரியைகள் – ரஷ்யாவில் விநோதம்

Why Russian Teachers Are Posting Pics In Swimsuits Online

by T.C.Gnanavel, Apr 2, 2019, 12:24 PM IST

ரஷ்யாவில் பிகினி ஆடையில் தோன்றும் பள்ளி ஆசிரியைகளின் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்நாட்டின் பர்னூல் நகரில் உள்ள பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை டர்ட்டினா கர்ஷ்னிகோவோ பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிகினி உடையில் தோன்றும் அவரது புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதே காரணமாகும். பள்ளியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பர்ட்டினா, தமக்கு ஆதரவு தெரிவிக்கும்படி வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று நாங்களும் மனிதர்கள் தான், எங்களும் ஆசைகள் உண்டு என்ற பதிவுடன் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பிகினி உடையில் தோன்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். ரஷ்ய ஆசிரியைகளின் பிகினி புகைப்படங்களால் சமூக வலைத்தளங்கள் பிஸியாகவுள்ளன.

You'r reading பிகினி ஆடையில் ஆசிரியைகள் – ரஷ்யாவில் விநோதம் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை