இலங்கை குண்டுவெடிப்பு 2 உயர் அதிகாரிகள் நீக்கம்! சிறிசேனா நடவடிக்கை!!

Sri Lankas president sacks defence secretary, police chief

by எஸ். எம். கணபதி, Apr 25, 2019, 10:01 AM IST

இலங்கையில் பாதுகாப்பு பணியில் அசட்டையாக இருந்த பாதுகாப்பு துறை செயலாளர் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரியை அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று, 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இது வரை 359 பேர் வரை பலியாகியுள்ளனர். 9 தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை தாங்களே நிகழ்த்தியதாக அறிவித்திருக்கிறார்கள்.

நீண்ட நெடுங்காலமாக குண்டுவெடிப்பு பயங்கரத்தை சந்தித்து வந்திருக்கும் இலங்கை அரசு, எப்படி இவ்வளவு அசட்டையாக இருந்தது என்ற கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அதிபர் சிறிசேனா பொறுப்பேற்றுள்ளார்.

மேலும், உளவுத் துறையின் முன்னெச்சரிக்கை தகவல்களை தனக்கு உரிய நேரத்தில் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை அரசின் பாதுகாப்பு துறை செயலாளர் ஹேமாஸ்ரீ பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

 

கோவை குண்டுவெடிப்பு போல் இலங்கையில் நடத்த சதிதிட்டம்..! இந்தியா 3 முறை எச்சரிக்கை..! -'திடுக்' தகவல்

You'r reading இலங்கை குண்டுவெடிப்பு 2 உயர் அதிகாரிகள் நீக்கம்! சிறிசேனா நடவடிக்கை!! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை