சமூக வலைதளங்களில் பல அரை பைத்தியங்களும் சில முழு பைத்தியங்களும் உலவி வருகின்றன. இந்த இன்ஸ்டாகிராம் மாடலை முழு பைத்தியம் என்றே பலர் அழைத்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மாடல் அழகியான ஸ்டெபனி லெய்க், தான் போகும் சுற்றுலா தளங்களில் செத்தது போல விழுந்து கிடந்து புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல மில்லியன் ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.
டிக் டாக்கில் செய்யும் சேட்டைகளை விட உலகின் புகழ் பெற்ற பல இடங்களுக்குச் சென்று இவர் செத்து செத்து விளையாடும் புகைப்பட சேட்டைகள் இணைய ரசிகர்களிடம் இவரையும் ஒரு பிரபலமாக மாற்றியுள்ளது.
கோல்டன் கேட் பாலம், பக்கிங்கம் அரண்மனை, ஈபிள் டவர் என பல பிரபல இடங்களிலும் இவர் செத்தது போல விழுந்து கிடக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
Stefdies என்ற ஹேஷ்டேகும் இன்ஸ்டாகிராம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் வாய்ந்ததாக உள்ளது.
அடுத்து இவர் எந்த ஊருக்குச் சென்று செத்தது போன்ற புகைப்படத்தை பதிவிட உள்ளார் என்ற ஆர்வம் மற்றும், எங்கள் ஊருக்கு வந்து செத்தது போன்ற புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுங்கள் என்றும் ஒரு கூட்டம் இவரிடம் கமெண்டுகளில் கெஞ்சி வருவது தான் காலக் கொடுமை.