`விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து டைரக்டர் சிவா, சூர்யாவை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
சூர்யா தற்போது, `சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும்9வது படத்தை இயக்குநர் சிவா இயக்குவதுதான் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் வேலைப் பார்த்த டெக்னீஷியன்ஸ் டீமையே தேர்ந்தெடுத்திருக்கிறார் சிவா. அதன்படி சூர்யா 39 படத்துக்கு டி.இமான் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். மேலும் எடிட்டிங் பணிகளை ரூபன் செய்கிறார்.
‘சூரரைப் போற்று’ படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்ததும் சிவா கூட்டணியில் ஜூன் அல்லது ஜூலை மாதம் சிவா படத்தில் சூர்யா இணைவார். அதற்குள் படத்துக்கான ஹீரோயின் தேர்வு உள்ளிட்ட மற்ற வேலைகள் நடைபெறும்.
சூர்யா 39 படத்தில் விஸ்வாசம் டெக்னீஷியன்ஸ்.. சிவாவின் வெற்றி ஃபார்முலா
Advertisement