மன்னித்து விடுங்கள்...! தவறான புகைப்படம்..! –தீவிரவாதிகள் புகைப்பட சர்ச்சையில் இலங்கை

sri lanka apologies for releasing wrong photo in terrorist list

by Suganya P, Apr 26, 2019, 00:00 AM IST

தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை புலனாய்வு போலீஸ்.

இலங்கையில் கடந்த 21-ம் தேதியன்று ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். தேவாலயங்கள், நட்சத்திர தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கையில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, நடத்திய விசாரணையில் பல 'திடுக்' தகவல்கள் வெளியாகியன.

நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. பின், ஐ.எஸ் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. முதற்கட்ட விசாரணையில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அதோடு, தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஆஸ்திரேலியாவில் படித்து, இலங்கைக்கு வந்தவர் என இலங்கை அரசு தெரிவித்தது. இப்படியான, தகவல்கள் இலங்கை அரசிடம் இருந்து வெளிவந்த வண்ணமாக இருந்தது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்களை நேற்று வெளியிட்டது. இதில்,மூன்று பெண்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இலங்கை அரசு வெளியிட்ட அந்த புகைப்படம், சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த புகைப்படத்தில், அமெரிக்க இஸ்லாமிய ஆர்வலராக செயல்படும் அமரா மஜுத் என்ற பெண் ஒருவரின் புகைப்படம் இடம்பெற்றது. இதற்கு, பல தரப்பிலும் இருந்து தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறன.

சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் என தனது புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமரா மஜுத் ட்விட்டரில் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இலங்கை புலனாய்வு காவல் அதிகாரிகள் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்.

முன்னதாக, குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின. ஆனால், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253 பேர் இலங்கை சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. தாக்குதல் தொடர்பாக, இலங்கை அரசு தெரிவித்து வரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரனாக இருக்கின்றன.

ஓட்டுக்கு 4 ஆயிரம் அல்ல 40 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுகவால் ஜெயிக்க முடியாது – தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

You'r reading மன்னித்து விடுங்கள்...! தவறான புகைப்படம்..! –தீவிரவாதிகள் புகைப்பட சர்ச்சையில் இலங்கை Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை