சிங்கப்பூரில் லஞ்சப்புகாரில் இந்தியருக்கு சிறை

bribe complaint indian get imprisonment in Singapore

by Subramanian, May 1, 2019, 09:06 AM IST

சிங்கப்பூரில் லஞ்சப்புகாரில் சிக்கிய இந்தியருக்கு 8 வார சிறை தண்டனையும், சுமார் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிங்கப்பூரின் கிழக்கு பிராந்தியத்தில் சாங்கி விமான நிலையம் உள்ளது. இங்குள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் இந்தியரான ஹிதேஸ்குமார் சந்துபாய் படேல் (வயது 37) கடந்த 2015 முதல் 2016 வரை வேலை பார்த்து வந்தார்.

சந்துபாய் படேல் பார்சல் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, பயணிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட அதிக எடையிலான பார்சல்களை விமானத்தில் அனுப்பி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் ரகசிய ஆய்வு நடத்தியபோது, ஹிதேஸ்குமார் சந்துபாய் படேலின் சதி அம்பலமானது.

இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. விசாரணையில் ஹிதேஸ்குமார் சந்துபாய் படேல் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன. இதனால், அவருக்கு 8 வார சிறை தண்டனையும், 800 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 ஆயிரம்) அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

You'r reading சிங்கப்பூரில் லஞ்சப்புகாரில் இந்தியருக்கு சிறை Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை