கீபோர்டில் டைப் செய்யப்படும் போது எழுத்துப் பிழைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சில இடங்களில் அதன் அர்த்தங்கள் மாறி காமெடிகளையும் சில நேரத்தில் சங்கடங்களையும் விளைவிக்கும் அளவுக்கு சென்றுவிடும்.
ஆஸ்திரேலியாவின் ரிசர் வங்கி வெளியிட்டுள்ள புதிய 50 டாலர் நோட்டில் பொறுப்பு என்பதை குறிக்கும் Responsibility என்ற வார்த்தைக்கு பதிலாக Responsibilty என்று அச்சாகியுள்ளது. ஒரே ஒரு ‘I’ மிஸ் ஆனதால், 40 லட்சம் நோட்டுகளிலும் மிகப்பெரிய எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளது.
இந்த டாலர் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்பட்டு 6 மாதங்கள் ஆன பின்பு தான் இன்ஸ்டாகிராம் போராளி ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டு டிரோல் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விளக்கமளித்த ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி அதிகாரி, அந்த பிழை கவனத்தில் கொள்ளப்படுகிறது. அடுத்த புதிய டாலர் நோட்டுகள் இந்த ஆண்டு இறுதியில் எந்தவொரு அச்சுப் பிழையும் இன்றி வெளியாகும் என கூலாக பதிலளித்து விட்டு சென்றுள்ளார்.