தேர்தல் முடிவு தெரிந்த பின்பு எதிர்க்கட்சிகள் ஆலோசனை! ஸ்டாலின் பேட்டி!!

we dont beleive exit poll, will wait for election results stalin

by எஸ். எம். கணபதி, May 20, 2019, 12:20 PM IST

‘‘நாங்கள் கருத்து கணிப்புகளை பொருட்படுத்துவது இல்லை. வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருப்போம். முடிவுகள் வந்த பிறகே எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(மே20) நிருபர்களுக்கு அளி்த்த பேட்டி வருமாறு:
* தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

கருத்து கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. தலைவர் கருணாநிதி சொல்லியது போல் கணிப்புகளை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. வரும் 23ம் தேதி மக்களின் கணிப்புகள் தெரியும். அதனால், இன்னும் மூன்று நாட்கள் காத்திருப்போம்.

* காங்கிரஸ் தலைவர் சோனியாவை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று சந்திக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளதே?
தேர்தல் முடிந்த பின்பு தற்போதுள்ள சூழலில் இது போன்ற சந்திப்புகள் நடைபெறுவது வழக்கமானதுதான்.

* தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உங்களை சந்தித்து பேசினாரே? என்ன முடிவெடுத்தீர்கள்?

அவர் பல முறை சென்னைக்கு வந்து என்னை சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருக்கிறார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அடுத்தகட்ட ஆலோசனை நடத்துவோம்.

* வரும் 23ம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு செல்கிறீர்களா?

23ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று யார் சொன்னது? நீங்களாக ஊடகங்களில் அப்படி செய்தி போட்டுள்ளீர்கள். 23ம் தேதி மாலையில்தான் முடிவுகள் தெரியும். எனவே, தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின்புதான் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

பாஜகவுக்கு ஒரு சட்டம்... எதிர்க்கட்சி வேறு ரூல் சா..? தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

You'r reading தேர்தல் முடிவு தெரிந்த பின்பு எதிர்க்கட்சிகள் ஆலோசனை! ஸ்டாலின் பேட்டி!! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை