7 சதவீத ஒதுக்கீடு தடை நீக்கம் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கூடுதல் கிரீன் கார்டு கிடைக்கும்!

Good news for IT professionals, US House removes country-cap on Green Cards

by எஸ். எம். கணபதி, Jul 11, 2019, 12:29 PM IST

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை(கிரீன்கார்டு) வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பு 7 சதவீதம் என்பதை ரத்து செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர்களுக்கு கூடுதலாக கிரீன் கார்டு கிடைக்கும்.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் குறிப்பிட்ட ஆண்டுகளை கடந்த பின்பு, விதிமுறைகளின்படி கிரீன் கார்டு(நிரந்தரக் குடியுரிமை) பெற விண்ணப்பிக்கிறார்கள். ஆனால், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்குத்தான் கிரீன் கார்டு தரப்படுகிறது. அதிலும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சமாக 7 சதவீதம் தான் கிரீன் கார்டு தரலாம் என்று வரம்பு உள்ளது.

இந்த வரம்பை நீக்குவதற்காக குடிபெயர்வோர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்தம் 435 உறுப்பினர்கள் கொண்ட சபையில், 365 பேர் மசோதாவை ஆதரித்தும், 65 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.

மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து இது செனட் சபைக்கு அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இதன்மூலம், ஒரு நாட்டிற்கு 7 சதவீதம் என்ற உச்சவரம்பு நீக்கப்படும். அதன்பின், இந்தியர்களுக்கு 15 சதவீதம் வரை கிரீன் கார்டு கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் இருந்து எச்1-பி விசாவில் ஏராளமானோர், தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளுக்கு(ஐ.டி.) வேலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட காலம் அங்கே தங்கி பணியாற்றிய பின்பு, கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். தற்போது 3 லட்சம் பேர் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்களாம். வேலைக்காக வந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என்று மொத்தத்தில் 15 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இது நல்ல செய்தி.

இன்னுமா பிரிட்டிஷ் சர்க்கார் நடக்குது? 82 வயது முதியவர் கொந்தளிப்பு

You'r reading 7 சதவீத ஒதுக்கீடு தடை நீக்கம் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கூடுதல் கிரீன் கார்டு கிடைக்கும்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை