ஒரே ஒரு மாணவிக்காக நிற்கும் ரயில்: அட்டவணையை மாற்றி அமைத்த ரஷ்ய ரயில்வேதுறை

by Rahini A, Feb 15, 2018, 10:30 AM IST

ரஷ்யாவில் ஒரே ஒரு மாணவிக்காக தனது கால, பயண அட்டவணையையே மாற்றி அமைத்துள்ளது ரஷ்ய ரயில்வே நிர்வாகம்.

வடமேற்கு ரஷ்யாவின் மிகவும் பின் தங்கிய கிரமப்பகுதி, போயகொண்டா. இந்தக் கிராமத்திலிருந்து நகரத்தில் இருக்கும் பள்ளிக்கு படிக்கச் செல்லும் ஒரே மாணவி கரினா. 14 வயதான கரினா தினமும் நகரத்தில் இருக்கும் பள்ளிக்குத் தன் பாட்டியுடன் செல்வது வழக்கம்.

கரினாவின் போயகொண்டா கிராமத்திலிருந்து அவளது பள்ளிக்குச் செல்ல இருக்கும் ஒரே வசதி ரயில். இந்த ரயில் அதிகாலையிலும், இரவிலும் மட்டுமே போயகொண்டா கிராமத்தில் நிற்கும்.

ஒரே ஒரு ரயில், அதுவும் ஒரு நாளில் இருவேளை மட்டுமே நிற்கும் ரயிலில் பயணித்தாகும் சூழலில் கரினா இருந்தாள். இதற்காக அதிகாலையில் தன் பாட்டியுடன் பள்ளிக்குக் கிளம்பி நள்ளிரவிலேயே வீடு திரும்பி வருவாள். இதுகுறித்து அருகில் உள்ள ரயில் நிலையத்தில் கரினாவின் தாயார் எடுத்துக்கூறினார்.

எவ்வித விளக்கமும் எதிர்பார்க்காமல் கரினாவின் பள்ளி நேரத்துக்கு அந்த வழியில் செல்லும் ரயிலை கரினாவுக்காக அவளது கிராமத்தில் நிற்குமாறு ஏற்பாடு செய்தது ரஷ்ய ரயிலே நிர்வாகம். இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் இருந்து முர்மானக் நகருக்குச் செல்லும் ரயில் கரினாவையும் அவளது பாட்டியையும் ஏற்றிக்கொண்டே செல்கிறது.

You'r reading ஒரே ஒரு மாணவிக்காக நிற்கும் ரயில்: அட்டவணையை மாற்றி அமைத்த ரஷ்ய ரயில்வேதுறை Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை