சிங்கப்பூர் மியூசியத்தில் ஸ்ரீதேவி மெழுகு சிலை: ஜான்வி, குஷி பரவசம்

sridevi wax statue unveiled in madame tussauds museum in singapore

by எஸ். எம். கணபதி, Sep 4, 2019, 14:02 PM IST

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை கண்டு, அவரது மகள்கள் ஜான்வி, குஷி பரவசம் அடைந்தனர்.

பாலிவுட் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துபாய் சென்றிருந்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலின் பாத்ரூமில் மர்மமான முறையில் இறந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்்த மாதம் 13 ம் தேதியன்று ஸ்ரீதேவியின் 56வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியம், நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அமைக்கப் போவதாக அறிவித்தது.

இந்த மேடம் துசாட்ஸ் நிறுவனம், ஏற்கனவே மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, குயின் எலிசபெத், பராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், கஜோல், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் உள்பட பலருடைய மெழுகு சிலைகளை வடிவமைத்து வைத்துள்ளது.

ஏற்கனவே மேடம் துசாட்ஸ் அறிவித்தபடி, சிங்கப்பூரில் உள்ள அதன் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. 20 கலைஞர்கள் கடந்த ஒரு மாதமாக ஸ்ரீதேவியின் குடும்பத்தினரிடம் ஆலோசனை பெற்று இந்த மெழுகு சிலையை அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழா, இன்று(செப்.4) சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் பங்கேற்றனர்.

You'r reading சிங்கப்பூர் மியூசியத்தில் ஸ்ரீதேவி மெழுகு சிலை: ஜான்வி, குஷி பரவசம் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை