முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கில் நவ.28ல் தீர்ப்பு.. பாகிஸ்தான் கோர்ட் அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Nov 19, 2019, 15:46 PM IST
Share Tweet Whatsapp

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கில் வரும் 28ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 1999ம் ஆண்டில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப், புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். 2007ம் ஆண்டு தனக்கு எதிராக மக்கள் மாறி விட்டதை உணர்ந்த அவர், நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கி, 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை சிறையிலடைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, அவர் மீது கடந்த 2014ம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, 2016-ம் ஆண்டில் மருத்துவச் சிகிச்சைக்காக அரசு அனுமதி பெற்று துபாய் சென்ற அவர், அங்கேயே தங்கி விட்டார். இதனால், அவரை நீதிமன்றம், தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்தது. தற்போது இந்த வழக்கில் வரும் 28ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Leave a reply