அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் இன்று 2019-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.இறுதிசுற்றில் மெக்சிக்கோ ,தென்னாபிரிக்கா மற்றும் போர்டோரிகோ நாட்டைசேர்ந்த அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதிசுற்றில் மூவருக்கும் ஒரே கேள்வி கேட்கப்பட்டு தனித்தனியாக மூவரிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன.தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அழகி அளித்த பதில் அனைவரின் பாராட்டை பெற்றதோடு பிரபஞ்ச அழகி பட்டத்தையும் பெற்று தந்தது.
கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்:
இந்த தலைமுறையை சேர்ந்த இளம்பெண்களுக்கு எதன் முக்கியத்துவத்தை பற்றி நாம் கற்று கொடுக்கவேன்டும் என்பதுதான் கேள்வி.இதற்கு பதிலளித்த தென்னாப்பிரிக்க அழகி "இளம்பெண்களிடம் நம்மை சுற்றியுள்ள சமூகத்தால் தலைமைப்பண்பு குறைவாக காணப்படுகிறது .ஆகையால் பெண்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை உணரவைத்து தலைமை பண்பிற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள கற்று கொடுக்க வேண்டும்." என்று உணர்ச்சி பொங்க பதிலளித்ததை கண்டு அரங்கமே ஆரவாரத்தால் அதிர்ந்தது.
கறுப்பும் அழகுதான்:
இறுதியாக மூன்று அழகிகளுக்கும் தேர்ந்தெடுப்பவர்கள் முன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட சமயத்தில் தென்னாப்பிரிக்க அழகியின் கருத்துக்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததோடு அழகிப்பட்டதையும் தட்டிச்செல்ல வைத்தது.என்னதான் சொன்னார்?"என்னைப்போன்ற கருப்புநிறதோலும் முடியுமுள்ள பெண்கள் அழகானவர்களாக கருத்தப்பட்டதில்லை.ஆனால் இன்றுமுதல் அப்படி கூறமுடியாது.எந்நிறமுடைய வளரும் குழந்தைகள் என்னில் அவர்களை பார்க்க வேண்டும்."என்றார். கருப்பும் அழகுதான்டா என நிறவெறி பிடித்தவர்களுக்கு செருப்படி கொடுத்தது அவரின் சமூக அக்கறையை பறைசாற்றுகிறது.