டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷனில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கார்த்திகேய சிவசேனாபதி

Advertisement

மினசோட்டா: அமெரிக்காவிலுள்ள, டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மையத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி கலந்துக் கொண்டு 40-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

மேலும் படங்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

அமெரிக்காவில், தமிழர்களுக்காகவும், தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் சார்பில் தமிழர் கலாச்சாரத்தைப் பேணும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மினடோங்கா கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் உறுப்பினருமான கார்த்திகேய சிவசேனாபதி கலந்துக் கொண்டு பார்வையார்கள் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சிவசேனாபதி தமிழ் மொழி, தமிழர் பாரம்பரியம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருபவர். அந்த வகையில், தமிழர்தம் வாழ்வியல், உணவுமுறை, உலகையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் உள்ளிட்ட ஏராளமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

முன்னதாக, டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷனின் பிரசிடென்ட் அஜித் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும், அதன் இயக்குநர் குழு உறுப்பினர் கோ.முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் சிவசேனாபதியை வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. பார்வையாளர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சிவசேனாபதி பொறுமையாகவும், நிதானமாகவும் பதிலளித்தார். இதனால், இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தன்ர்.

மேலும் படங்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

அங்கு, சிவசேனாபதிக்கு காளையின் சிலை ஒன்றை டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் பரிசாக வழங்கி கவுரவித்தது.

Advertisement
/body>